லெமூர் கடற்கரையில் 75 ஆமை குஞ்சுகள் கடலில் விடப்பட்டன
கன்னியாகுமரி மாவட்டம், லெமூர் கடற்கரையில் இன்று காலை 75 ஆமை குஞ்சுகள் கடலில் விடப்பட்டன
கன்னியாகுமரி மாவட்ட கடற்கரை பகுதிகளில் ஆமைகளை பாதுகாக்கும் வகையில் 2013 ஆம் ஆண்டு முதல் வனத்துறை சார்பில் கடல் ஆமைகள் முட்டைகள் சேகரிக்கப்படுகிறது. இவை ஆமைக்குஞ்சுகள் பொரிப்பகத்தில் பாதுகாப்பாக வைக்கப்படுகிறது. அதன் பிறகு 45 நாட்கள் கடந்து குஞ்சுகள் பொரிந்து வெளியே வந்த பின்னர் கடலில் விடப்படுகின்றன. இதற்காக குமரி மாவட்டத்தில் துவாரகாபதி உள்ளிட்ட இடங்களில் ஆமை முட்டை பொரிப்பகங்கள் அமைக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து தற்போது லெமூர் கடற்கரை பகுதியில் ஆமை முட்டை குஞ்சு பொரிப்பகம் ஒன்று அமைக்கப்பட்டு இருந்தது. அதில் சேகரித்து வைக்கப்பட்டிருந்த ஆமை முட்டைகளில் 75 குஞ்சுகள் தற்போது பொறித்தன. அதைத்தொடர்ந்து மாவட்ட வன அலுவலர் உத்தரவின் பேரில் வேளிமலை ரேஞ்சர் ராஜேந்திரன், வனவர் அசிஸ் ஆகியோர் முன்னிலையில் லெமூர் பீச்சில் இன்று காலை ஆமை குஞ்சுகளை கடலில் விடும் நிகழ்ச்சி நடைபெற்றது.