75வது குடியரசு தினம்; சேலத்தில் தேசியக்கொடி ஏற்றிய கலெக்டர்

சேலத்தில் 75வது குடியரசு தினத்தை ஒட்டி கலெக்டர் கார்மேகம் தேசியக்கொடியை ஏற்றி வைத்தார்.

Update: 2024-01-26 10:55 GMT

சேலத்தில் 75வது குடியரசு தினத்தை ஒட்டி கலெக்டர் கார்மேகம் தேசியக்கொடியை ஏற்றி வைத்தார்.

சேலம் மாவட்ட நிர்வாகம் சார்பில் சேலம் மகாத்மாகாந்தி விளையாட்டு மைதானத்தில் குடியரசு தின விழா இன்று நடைபெற்றது . விழாவிற்கு மாவட்ட கலெக்டர் கார்மேகம் தலைமை தாங்கி தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார் . இதையடுத்து போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். தொடர்ந்து சுதந்திர போராட்ட வீரர்களின் தியாகத்தை போற்றும் வகையில் அவர்களின் வாரிசுதாரர்களை சிறப்பு செய்யும் வகையில் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் கலெக்டர் கார்மேகம் கதர் ஆடை அணிவித்து பரிசுகளை வழங்கினார்.

இதனை தொடர்ந்து சிறந்த போலீசாருக்கு விருதுகள் வழங்கினார். மேலும் மாற்றுத்திறனாளிகள் துறை சார்பில் ரூ.1.13 லட்சம் மதிப்பில் பேட்டரியால் இயங்கும் சக்கர நாற்காலி, காதொலி கருவி 2 பயனாளிகளுக்கும், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் ரூ.2 லட்சம் மதிப்பில் திருமண நிதி உதவி மற்றும் 8 கிராம் தங்க நாணயம் 5 பயனாளிகளுக்கும், மகளிர் திட்டம் சார்பில் சமுதாய முதலீட்டு கடன் மகளிர் சுய உதவிக்குழு கடன் ரூ.8.48 லட்சம் 3 பயனாளிகளுக்கும், வேளண்மை துறை சார்பில் வேளாண் எந்திரமயமாக்குதலுக்கா துணை இயக்கம் சுழற் கலப்பை ரூ.42 ஆயிரம் மதிப்பில் 1 பயனாளிக்கும், வேளாண்மை பொறியியல் துறை சார்பில் ரூ.6.81 லட்சம் மதிப்பில் டிராக்டர் 1 பயனாளிக்கும், வழங்கப்பட்டது. தொடர்ந்து கலெக்டர் கார்மேகம் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.

Tags:    

Similar News