மணல் கடத்தல்: 8 மாட்டு வண்டிகள் பறிமுதல்-ஒருவர் கைது

காவல்துறையினருக்கு கிடைத்த புகாரை அடுத்து சோதனையில் ஈடுப்பட்டனர்

Update: 2023-12-14 06:16 GMT

மணல் கடத்தலில் ஈடுபட்ட 8 மாட்டு வண்டிகள் பறிமுதல்

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

பெரணமல்லூர் காவல் சரகப் பகுதிகளில் அரசு அனுமதியின்றி ஆற்று மணல் கடத்தியதாக, போலீஸார் 8 மாட்டு வண்டிகளை பறிமுதல் செய்து ஒருவரை கைது செய்தனர். செய்யாற்றுப் படுகையில் இருந்து மாட்டு வண்டிகள் மற்றும் டிராக்டர்கள் மூலம் மணல் எடுத்துச் செல்வதாக போலீஸாருக்கு புகார்கள் வந்தன. அதன் அடிப்படையில், செய்யாறு டி.எஸ்.பி. சின்ராஜ் உத்த ரவின் பேரில், செய்யாறு காவல் உதவி ஆய்வாளர் பாஸ்கரன் தலை மையிலான போலீஸார் தண்டரை கிராமம் அருகே உள்ள செய்யாற்றுப் பகுதியில் ரோந்து சென்று கண்காணித்தனர். அப்போது ஆற்று படுக்கையில் இருந்து மாட்டு வண்டிகளில் மணல் எடுத்து வந்தவர்கள், வண்டிகளை நிறுத்திவிட்டு தப்பி ஓடி விட்டனர். இருப்பினும், போலீஸார் விரட்டிச் சென்று ஒருவரை மடக்கிப் பிடித்தனர்.

அவரிடம் விசாரணை மேற்கொண்டபோது, அவர் சேராம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த ராஜ்குமார் (32) என்பதும், செய்யாற்றில் இருந்து மணல் எடுத்து வந்ததும் தெரிய வந்தது. உடனே போலீஸார் அவரை கைது செய்தனர். மேலும், போலீஸார் வழக்குப் பதிவு செய்து 7 மாட்டு வண்டி களை பறிமுதல் செய்த நிலையில், சேராம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த ஹரிகிருஷ்ணன், கிருஷ்ண சாமி, முத்து, செந்தில், பெருமாள்,வேலு ஆகியோரை தேடி வருகின்றனர். பெரணமல்லூர் சரகம் பெரணமல்லூர் காவல் உதவி ஆய்வாளர் ஆறுமுகம் தலைமையிலான போலீஸார் தீவிர மணல் கடத்தல் தடுப்புச் சோதனையில் ஈடு பட்டனர். அப்போது, முனுகப்பட்டு கிராமத்தில் வந்து கொண்டிருந்த மாட்டு வண்டியை மடக்கிய போது, வண்டியை ஓட்டி வந்தவர் அங்கேயே நிறுத்தி விட்டு ஓடிவிட்டார். உடனே போலீஸார் வழக்குப் பதிவு செய்து மாட்டு வண்டியை பறிமுதல் செய்தனர். மேலும், தப்பி ஓடிய மேல்புத் தூர் கிராமத்தைச் சேர்ந்த தனசேக ரன் என்பவரை போலீஸார் தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News