கரூர்: நள்ளிரவில் 8 பேர் கைது
கரூரில் நள்ளிரவில் பணம் வைத்து சூதாடிய 8- பேரை போலீசார் கைது செய்தனர்.
கரூர் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில், பணம் வைத்து சூதாடுவதாக காவல் உதவி ஆய்வாளர் மாரிமுத்துக்கு தகவல் கிடைத்தது. இந்த தகவலின் அடிப்படையில் மே 28ஆம் தேதி அதிகாலை 3:30 மணி அளவில் கரூர் நகரப் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டார்.
அப்போது திரு நீலகண்டார் திருமண மண்டபம் அருகே பணம் வைத்து சூது ஆடுவதை கண்டுபிடித்தனர். இந்த சூதாட்டத்தில் ஈடுபட்ட கரூர் காந்தி நகரை சேர்ந்த மாரிமுத்து, மணிகண்டன், சிவகுமார், கீரைக்கார தெருவை சேர்ந்த செல்வகுமார், ஏ வி எஸ் சாலையைச் சேர்ந்த செந்தில்குமார், செங்குந்தபுரத்தைச் சேர்ந்த நாகராஜ், லட்சுமிபுரத்தைச் சேர்ந்த கோகுல்ராஜ், வையாபுரி நகரை சேர்ந்த ஆதிசக்தி ஆகிய எட்டு பேரையும் கைது செய்தனர். பின்னர் அவர்கள் சூதாட பயன்படுத்திய சூதாட்ட அட்டைகளையும், ரூபாய் 43 ஆயிரத்தையும் பறிமுதல் செய்தனர்.