திருமயம் அருகே உள்ள மேலதிருவாசபுரத்தை சேர்ந்தவர் சுப்பையா(80). திருமணமாகி 1 மகனும் 4 மகள்களும் உள்ளனர். வீட்டில் சரிவர தன்னை கவனிக்காத காரணத்தால் வாழ்க்கை மீது வெறுப்பு ஏற்பட்டு வீட்டில் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து அவரது மகன் அளித்த புகார் அடிப்படையில் பனையப்பட்டி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.