நீலகிரியில் 80% அரசுப் பஸ்கள் இயக்கம்
நீலகிரி மாவட்டத்தில் 80% அரசு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது.
Update: 2024-01-09 09:49 GMT
நீலகிரி மாவட்டத்தில் உள்ள உதகை, குன்னூர், கோத்தகிரி மற்றும் கூடலூர் பனிமனைகளில் இருந்து வழக்கமாக 335 அரசு பேருந்துகள் இயக்கபட்டு வருகிறது. இந்த நிலையில் போக்குவரத்து தொழிற்சங்கங்கள் வேலை நிறுத்தம் காரணமாக 9 மணி நிலவரப்படி 80% பேருந்துகள் இயக்கபட்டு வருகிறன. அண்ணா தொழிற்சங்கம், சிஐடியூ உள்ளிட்ட தொழிற்சங்கங்களை சேர்ந்த தொழிலாளர்கள் பணிக்கு வராததால் 20% பேருந்து சேவை பாதிக்கபட்டுள்ளது. மேலும் கோவை, ஈரோடு, சேலம், திருப்பூர் உள்ளிட்ட சமவெளி பகுதிக்கு சென்று உதகைக்கு திரும்பி வரும் அரசு பேருந்துகளும் கிராம புறங்களில் இருந்து வரும் பேருந்துகளும் பணிமனைக்குள் செல்வதால் உதகையில் பேருந்து சேவை பாதிக்கபடும் நிலை உள்ளது.