கள்ளக்குறிச்சி மார்க்கெட் கமிட்டியில் 8.11 லட்சம் வர்த்தகம்

கள்ளக்குறிச்சி மார்க்கெட் கமிட்டியில் 8.11 லட்சம் வர்த்தகம் நடைபெற்றது.

Update: 2024-03-26 04:44 GMT

வர்த்தகம்

கள்ளக்குறிச்சி மார்க்கெட் கமிட்டியில் 8.11 லட்சம் ரூபாய்க்கு வர்த்தகம் நடந்தது. கமிட்டிக்கு, எள் 40 மூட்டை, வேர்க்கடலை 34, மக்காச்சோளம் 18 உட்பட 92 மூட்டை விளை பொருட்களை விவசாயிகள் கொண்டு வந்தனர். சராசரியாக, ஒரு மூட்டை எள் 10,730 ரூபாய்க்கும் வேர்க்கடலை 8,200, மக்காச்சோளம் 2,273 ரூபாய்க்கும் கொள்முதல் செய்யப்பட்டது. கமிட்டியில் மொத்தமாக 8 லட்சத்து 11 ஆயிரம் ரூபாய்க்கு வர்த்தகம் நடந்தது. சின்னசேலம் மார்க்கெட் கமிட்டியில் எள் 7 மூட்டை, மக்காச்சோளம் 6 ஆகிய 13 மூட்டை விளைபொருட்களை விற்பனைக்காக கொண்டு வந்தனர். சராசரியாக ஒரு மூட்டை எள் 10,377 ரூபாய்க்கும், மக்காச்சோளம் 2,260 ரூபாய்க்கும் கொள்முதல் செய்யப்பட்டது. மொத்தமாக 84 ஆயிரத்து 123க்கு வர்த்தகம் நடந்தது. தியாகதுருகம் மார்க்கெட் கமிட்டியில் நெல் 40 மூட்டை, உளுந்து 5 மூட்டை என 45 மூட்டை விளைபொருட்கள் விற்பனைக்காக கொண்டு வரப்பட்டது. சராசரியாக நெல் 2756 ரூபாய்க்கும், உளுந்து 8689 ரூபாய்க்கும் கொள்முதல் செய்யப்பட்டது.
Tags:    

Similar News