முனீஸ்வர சாமிக்கு 84வது ஆண்டு காவடி திருவிழா
மயிலாடுதுறை கீழ நாஞ்சில் நாட்டில் ஸ்ரீ முனீஸ்வரர் சுவாமிக்கு 84 ஆம் ஆண்டு காவடி திருவிழா. ஏராளமான பக்தர்கள் காவடி அழகு காவடி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.
By : King 24X7 News (B)
Update: 2024-04-23 15:13 GMT
மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை நகர் கீழ நாஞ்சில் நாடு பகுதியில் ஸ்ரீ முனீஸ்வரர் சுவாமி ஆலயம் உள்ளது. இவ்வாலயத்தில் சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு 84 ஆம் ஆண்டு காவடி திருவிழா நடைபெற்றது. விரதம் இருந்த பக்தர்கள் மயிலாடுதுறை காவிரி துலா கட்டத்திலிருந்து, காவடி எடுத்தும் அழகு காவடி குத்தியும் பக்தி பரவசத்துடன் நடனமாடியவாறு வீதி உலா நடைபெற்றது.
மேளதாள வாத்தியங்கள் முழங்க சிறுவர்கள் பால்காவடி எடுத்தும் ஏராளமான பக்தர்கள் காவடி மற்றும் அழகு காவடியுடன் நகரின் முக்கிய வீதியில் வழியாக ஆலயம் வந்தடைந்தனர்.
தொடர்ந்து ஸ்ரீ முனீஸ்வர ஸ்வாமிக்கு அபிஷேக ஆராதனைகள் மகாதீபாரதனை நடைபெற்றது. முன்னதாக வீதி உலாவாக வந்த காவடிகளுக்கு வீடுகள் தோறும் பொதுமக்கள் தீபாராதனை எடுத்து வழிபாடு நடத்தினர்.