காஞ்சியில் 88 சவரன் நகை மற்றும் ரூ.36 லட்சம் மீட்பு

காஞ்சியில் 88 சவரன் நகை மற்றும் ரூ.36 லட்சம் மீட்பு 80 வழக்குகளில் தொடர்புடையவர் கைது செய்யப்பட்டார்.

Update: 2024-03-28 12:45 GMT

மீட்கப்பட்ட நகைகள்

காஞ்சிபுரம் விளக்கடி கோவில் தெருவைச் சேர்ந்தவர் ராஜேஷ். இவரது வீட்டில், கடந்த பிப்., 16ம் தேதி, சுவர் ஏறி வீட்டிற்குள் புகுந்த மர்ம நபர், கதவை உடைத்துக் கொண்டு உள்ளே சென்று, 15 சவரன் தங்க நகைகளை கொள்ளையடித்து சென்றார். 

இதையடுத்து, அதே தெருவில், மஹாவீர் சந்த் என்பவர் வெளியூர் சென்றிருந்த நிலையில், அவரதுநகைக்கடை மற்றும் வீட்டை நோட்டமிட்ட மர்ம நபர், மார்ச் 1ம் தேதி வீட்டிற்குள் புகுந்து, ஒரு லட்சம் ரூபாய் ரொக்க பணம் மற்றும் 180 சவரன்நகையை கொள்ளைஅடித்து சென்றார்.

இதுகுறித்து, விஷ்ணுகாஞ்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து, தீவிரமாக விசாரித்து வந்தனர். காஞ்சிபுரம் நகரில் உள்ள 100க்கும் மேற்பட்ட கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தனர். அதில், ஒரே நபர், இந்த இரு கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டது தெரியவந்தது.

தடயவியல் நிபுணர்கள் மற்றும் கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகள் அடிப்படையில், ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினம், பாபுஜி காலனியைச் சேர்ந்த, கரி என்கிற சதீஷ்ரெட்டி, 40, என்பது தெரியவந்தது. இதையடுத்து, ஆய்வாளர்கள் வெற்றிச்செல்வன், சங்கர சுப்பிரமணியம், சித்ரா ஆகியோர் தலைமையில் தனிப்படையினர் ஆந்திரா சென்றனர்.

அங்கு பல நாட்களாக தீவிர விசாரணை மேற்கொண்ட நிலையில், சதீஷ்ரெட்டியை போலீசார் கைது செய்து, அவரிடமிருந்து, 708 கிராம் தங்க நகைகள் மற்றும் கொள்ளையடித்த நகைகளை விற்றதில் கிடைத்த 36 லட்சம் ரூபாயையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

Tags:    

Similar News