9-வது தேசிய யுனானி தின விழா

நாகூர் தர்காவில் யுனானி மருத்துவ முகாம்;

Update: 2025-02-09 11:20 GMT
நாகை மாவட்ட தலைமை சித்த மருத்துவமனையில், இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி துறையின்கீழ் இயங்கும் யுனானி மருத்துவத்தின் 9-வது தேசிய யுனானி தின விழா நடைபெற்றது. விழாவின் அங்கமாக, நாகூர் தர்காவில் மாவட்ட சித்த மருத்துவமனையின் சித்த மருத்துவ அலுவலர் மருத்துவர் ஜோதி சாந்தகுமாரி, மருத்துவ கண்காணிப்பாளர் ஜே.அப்துல் மஜீத் ஆகியோர் தலைமையில், நாகூர் தலைமை காஜி ஹுசைன் சாஹிப் முன்னிலையில், யுனானி மருத்துவ முகாம் மருத்துவர் வி்.முசம்மில் அகமத், மருத்துவர் ஆயிஷா ஆகியோரால் நடத்தப்பட்டது. முகாமில், நாகை மாவட்ட தலைமை சித்த மருத்துவ மருந்தாளுநர், ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.

Similar News