9 ஆண்டுகள் தலைமறைவாக இருந்த ரவுடி கைது:போலீசாருக்கு பாராட்டடு சான்றிதழ்
9 ஆண்டுகள் தலைமறைவாக இருந்த ரவுடி கைது:போலீசாருக்கு பாராட்டு சான்றிதழ்;
தனிப்படை போலீசாருக்கு ஆணையர் பாராட்டு சான்றிதழ். செங்குன்றம் அருகே உள்ள நல்லூர் ஊராட்சி அம்பேத்கர் நகரை சேர்ந்தவர் முத்து பிரகாஷ். இவர் கடந்த 2013 ஆம் ஆண்டு மர்ம கும்பலால் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான காந்தி நகரைச்சேர்ந்த சுபாஷ் என்பவர் தலைமறைவாகினார். இந்த நிலையில் ஆவடி காவல் ஆணையர் சங்கர் குற்றவாளியை பிடிக்க உத்தரவிட்டார். செங்குன்றம் காவல் சரக உதவி ஆணையர் ராஜா ராபர்ட் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசார் கடந்த வாரம் சுபாஷை கைது செய்தனர். இதற்காக தனிப்படை தலைவர் உதவி ஆணையர் ராஜா ராபர்ட் மற்றும் போலீசாருக்கு ஆவடி காவல் ஆணையர் சங்கர் சான்றிதழ்களை வழங்கி பாராட்டினார்.