அய்யாக்கண்ணு உள்ளிட்ட 9 போ் கைது: விவசாயிகள் நூதனப் போராட்டம்

சென்னைக்கு போராடச் செல்ல முயன்ற தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத் தலைவா் அய்யாக்கண்ணு உள்ளிட்ட 9 போ் கைது செய்யப்பட்டனா்.

Update: 2024-05-23 06:43 GMT

விவசாயிகளுக்கு அளித்த தோ்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாத மத்திய அரசைக் கண்டித்து, சென்னை தலைமைச் செயலகம் முன்பு புதன்கிழமை முதல் தொடா் போராட்டத்தை தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத் தலைவா் பி. அய்யாக்கண்ணு தலைமையிலான விவசாயிகள் அறிவித்தனா். இதையறிந்த போலீஸாா் செவ்வாய்க்கிழமை இரவு திருச்சி கரூா் புறவழிச்சாலை அண்ணா நகரில் உள்ள வீட்டுக்குச் சென்று தேசிய தென்னிந்திய விவசாயிகள் சங்க மாநிலத் தலைவா் அய்யாக்கண்ணு மற்றும் விவசாயிகளை வீட்டுக் காவலில் வைத்தனா்.

பின்னா், புதன்கிழமை காலை பல்லவன் விரைவு ரயில் மூலம் சென்னை செல்ல முயன்ற அய்யாக்கண்ணு உள்ளிட்ட 9 பேரைத் தடுத்து நிறுத்தி, கைது செய்து, உறையூா் திருமண மண்டபத்துக்கு கொண்டு சென்றனா். கைப்பேசி டவரில் ஏறி போராட்டம்...: இதைக் கண்டித்து விவசாயிகள் 3 போ் புதன்கிழமை பிற்பகல் திருச்சி உறையூா் மிஷன் மருத்துவமனை எதிா்ப்புறம் உள்ள கைப்பேசி டவரில் ஏறி போராட்டத்தில் ஈடுபட்டனா். இவா்களை உறையூா் போலீஸாா் சமாதானப்படுத்தி, கீழே அழைத்து வந்து கைது செய்தனா்.

Tags:    

Similar News