சேலத்தில் தபாலில் ஓட்டுப் போட 9,337 பேர் ஆர்வம்

சேலம் மாவட்டத்தில் தபால் ஓட்டு போடுவதற்கு மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்டோர் 9,337 பேர் விண்ணப்பித்துள்ளனர்.

Update: 2024-03-26 01:24 GMT

சேலம் மாவட்டத்தில் தபால் ஓட்டு போடுவதற்கு மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்டோர் 9,337 பேர் விண்ணப்பித்துள்ளனர்.

தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் அடுத்த மாதம் (ஏப்ரல்) 19-ந் தேதி நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. தேர்தலில் 100 சதவீதம் வாக்களிப்பதற்காக பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்த தேர்தலில் மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் வீட்டில் இருந்தே வாக்களிக்கும் வகையில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இதற்காக படிவம் 12 டி அறிமுகப்படுத்தப்பட்டு தபால் மூலம் வாக்குகளை செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சேலம் மாவட்டதை பொறுத்தவரை மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் என 50 ஆயிரத்து 178 பேர் உள்ளன. இவர்கள் வீட்டில் இருந்தப்படியே தபால் மூலம் வாக்களிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதில் 5 ஆயிரத்து 676 மூத்த குடிமக்களும், 3 ஆயிரத்து 661 மாற்றுத்திறனாளிகள் என 9,337 பேர் 12டி விண்ணப்பம் அளித்துள்ளனர். அவர்களுக்கான தபால் வாக்குச்சீட்டு வழங்கப்பட்டு சம்பந்தப்பட்ட மண்டல அலுவலர்கள் மூலம் வீட்டில் இருந்தவாறே தபால் வாக்கு செலுத்த வழிவகை செய்யப்பட்டுள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags:    

Similar News