95 வயது ஓய்வு பெற்ற தலைமையாசிரியர் தம்பதியினருக்கு பெற்றோர் தினத்தை முன்னிட்டு 80-வது திருமண சதாபிஷேக விழா நடத்தி கொண்டாடிய மகன், மகள் மற்றும் பேரக்குழந்தைகள்*

95 வயது ஓய்வு பெற்ற தலைமையாசிரியர் தம்பதியினருக்கு பெற்றோர் தினத்தை முன்னிட்டு 80-வது திருமண சதாபிஷேக விழா நடத்தி கொண்டாடிய மகன், மகள் மற்றும் பேரக்குழந்தைகள்*;

Update: 2025-06-01 12:43 GMT
திருச்சுழியில் 95 வயது ஓய்வு பெற்ற தலைமையாசிரியர் தம்பதியினருக்கு பெற்றோர் தினத்தை முன்னிட்டு 80-வது திருமண சதாபிஷேக விழா நடத்தி கொண்டாடிய மகன், மகள் மற்றும் பேரக்குழந்தைகள் விருதுநகர் மாவட்டம், திருச்சுழி அருகே நெல்லிக்குளம் கிராமத்தை சேர்ந்த ஓய்வு பெற்ற தலைமையாசிரியர்கள் கந்தசாமி - நல்லம்மாள் தம்பதியினருக்கு வயது 95 ஆகிறது. இவர்களுக்கு 3 மகள்கள் மற்றும் 1 மகன் உள்ளனர். இதில் மகன் டி.எஸ்.பியாகவும், மகள்கள் அரசு வேலையிலும், தலைமையாசிரியராகவும் பணிபுரிந்து வருகின்றது. இவர்களது மகன், மகள்களும் மருத்துவர், ஆசிரியர், போன்ற பல்வேறு படிப்புகளை படித்து வருகின்றனர். இந்த நிலையில் இன்று திருச்சுழி திருமேனிநாதர் ஆலயத்தில் பெற்றோர்கள் தினத்தை கொண்டாடும் விதமாக ஓய்வு பெற்ற தலைமையாசிரியர்கள் தம்பதி கந்தசாமி - நல்லம்மாள் அவர்களுக்கு 80-வது திருமண சதாபிஷேக விழா வெகுவிமரிசையாக நடைபெற்றது. தாய், தந்தையருடைய திருமணங்களை பிள்ளைகள் பார்த்து இருக்கமாட்டார்கள், அவர்களுடைய மகன், மகள், பேரக்குழந்தைகள் சேர்ந்து வயதான தம்பதியினருக்கு 80-வது திருமணம் செய்து வைத்து அழகு பார்தனர். இதில் இரண்டு பெரியவர்களுக்கு மாலை அணிவித்து தாலி கட்டி திருமண வைபவம் நடைபெற்றது. மகன்கள், மகள்கள், பேரன்கள், பேத்திகள், கொள்ளு பேரன்கள், கொள்ளு பேத்திகள், மருமகள்கள், மருமகன்கள் போன்ற உற்றார் உறவினர்கள் மற்றும் கிராமமக்கள், முன்னாள் மாணவர்கள், நண்பர்கள் உட்பட ஏராளமானோர் 80-வது திருமண சதாபிஷேக விழாவில் கலந்து கொண்டு பெரியவர்கள் காலில் விழுந்து கும்பிட்டு ஆசிர்வாதம் பெற்றனர். ஒரு பெரியவர் என்பது வயதை கடந்து விட்டால் அவர் பூரண வாழ்வு வாழ்ந்தாக கருதுகிறோம். அதாவது அவர் ஆயிரம் பிறை கண்டவர் என்று கூறி அவர்களை வணங்கி வந்தனர். பின்னர் அனைவருக்கும் உணவு விருந்து அளிக்கப்பட்டது. மேலும் நிகழ்ச்சிகள் கலந்து கொண்ட அனைவருக்கும் மா, தென்னை, போன்ற மரக்கன்றுகள் வழங்கப்பட்டன.

Similar News