நான்கு தலைமுறையினருடன் கேக் வெட்டி கொண்டாடிய 100 வயது முதியவர்
Update: 2023-12-11 07:49 GMT
ஈரோடு மாவட்டம் சூரம்பட்டி அடுத்துள்ள மோகன்குமாரமங்களம் சாலையில் முதியோர் தம்பதியினர் குமரகுரு-லட்சுமியம்மாள் வசித்து வருகின்றனர்.இத்தம்பதியினருக்கு மூன்று ஆண் மற்றும் பெண் குழந்தைகள் உள்ள நிலையில் குமரகுருவிற்கு இன்று நூறாவது பிறந்த தினம் கொண்டாடப்பட்டது. குமரகுருவின் மகன் மற்றும் மகள் வழி கொள்ளு பேரன் மற்றும் பேத்திகள் என 90க்கும் மேற்பட்டவர்கள் பிறந்தநாள் விழாவில் கலந்துகொண்டனர். தம்பதியினருக்கு புத்தாடைகள் அணிந்து கேக் வெட்டி இருவரும் கேக்குகளை ஊட்டி மகிழ்ந்தனர்.தொடர்ந்து அனைவரும் தம்பதியினரிடம் ஆசிர்வாதம் பெற்று ஆனந்தம் அடைந்தனர். அனைத்திலும் நவீனமாகியுள்ள இந்த காலத்தில் ஒரே வீட்டில் உள்ள மற்றொருவரை முகம் பார்த்து பேச முடியாத அளவிற்கு செல்போன் டெக்னாலஜி அடிமையாக்கி வைத்துள்ளது.இந்த நிலையில் நான்கு தலைமுறையை சேர்ந்த குடும்பங்கள் ஒன்றிணைந்து நூறாவது பிறந்த தினம் கொண்டாடிய சம்பவம் கூட்டு குடும்பத்தை ஊக்குவிப்பதாகவும் பிரிந்த சொந்தங்கள் மீண்டும் இணைய முக்கியமானதாகவும் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.