வெள்ளகோவிலில் உடைந்து கிடக்கும் பிளாஸ்டிக் தண்ணீர் தொட்டி
வெள்ளக்கோவிலில் உடைந்து கிடக்கும் பிளாஸ்டிக் தண்ணீர் தொட்டியை அகற்றி புதிய தொட்டி வைக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என நகராட்சிக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Update: 2024-04-22 08:05 GMT
வெள்ளகோவில் பகுதிக்கு கொடுமுடி காவிரி ஆற்றில் இருந்து காவிரி கூட்டு குடிநீர் திட்டம், அமராவதி ஆற்று குடிநீர் திட்டம் மற்றும் உள்ளூர் நீர் ஆதாரங்களான கிணறு, ஆழ்துளை கிணறுகள் மூலம் பொது மக்களுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. இதற்காக ஆங்காங்கே தெருக்களில் பிளாஸ்டிக் தண்ணீர் தொட்டி வைத்து அவற்றில் மோட்டார் மூலம் தண்ணீர் நிரப்பி பயன்படுத்தக்கூடிய பொதுக் குழாய்கள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் வெள்ளகோவில் எல்கேஜி நகர் மேற்கு மன்சாலையில் வைக்கப்பட்டிருந்த பிளாஸ்டிக் தண்ணீர் தொட்டி இரண்டாக உடைந்து அப்படியே கிடக்கிறது. இதை உடனடியாக மாற்றி பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை முன்வைக்கின்றனர்.