கழிவு நீர் குழாய் உடைந்து சுகாதாரக் கேடு
Update: 2024-01-05 11:11 GMT
திண்டுக்கல் பஸ் ஸ்டாண்ட் எட்டு மாவட்டங்களுக்கு ஒரு மையமாக விளங்குகிறது. தினமும் நூற்றுக்கு அதிகமான பஸ்கள் வந்து செல்லுகின்றன. பயணிகளின் வருகை அதிகரிப்பால் பஸ் ஸ்டாண்டில் சுகாதாரமற்ற நிலை ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில் திண்டுக்கல் மாநகராட்சி பேருந்து நிலையம் மையப் பகுதியில் பைப் உடைந்து கழிவுநீர் வெளியேறுகிறது. அங்கு தினசரி 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் மற்றும் கல்லூரி, பள்ளி மாணவ மாணவிகள் அங்கு சென்று வருகிறார்கள். தொற்று நோய் பரவும் நிலையில் உள்ளது .இதனை இந்த துறையை சார்ந்த மாநகராட்சி ஊழியர்கள் நடவடிக்கை எடுப்பார்களா. இந்நிலையில் திண்டுக்கல்பேருந்து நிலையத்தில் வெள்ளோடு பேருந்து நிறுத்தும் இடம் கழுவுநீர் தேங்கி சுகாதார கேடு ஏற்படும் மையமாக மாறி உள்ளது.