இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.7 லட்சம் இஞ்சி மூட்டை பறிமுதல் !
இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.7 லட்சம் இஞ்சி மூட்டை பறிமுதல் செய்யப்பட்டன;
By : King 24x7 Angel
Update: 2024-06-14 05:37 GMT
இஞ்சி
தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு கடத்தப்பட முயன்ற ரூ.7 லட்சம் மதிப்பிலான இஞ்சி மூட்டைகளை சுங்கத் துறையினர் பறிமுதல் செய்தனர். தூத்துக்குடி திரேஸ்புரம் கடற்கரையில் சுங்கத் துறையினர் கடந்த 8ஆம் தேதி இரவு ரோந்து சென்றனர். அப்போது, கடற்கரையில் இருந்து சுமாா் 1 கடல் மைல் தொலைவில் படகு நங்கூரமிட்டு நிறுத்தப்பட்டிருந்தது.
அதை சுங்கத் துறையினர் சோதனையிட்டபோது, அதில் இலங்கைக்கு கடத்துவதற்காக 2,460 கிலோ இஞ்சி மூட்டைகள் இருப்பது தெரியவந்தது. அவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அதன் மதிப்பு ரூ. 7 லட்சம் எனக் கூறப்படுகிறது. இது தொடா்பாக திரேஸ்புரத்தைச் சோ்ந்த சிலரிடம் சுங்கத் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.