விழுப்புரம், திண்டிவனத்தில் பட்டா வழங்க மனுக்கள் பெறும் முகாம்
விழுப்புரம், திண்டிவனத்தில் நத்தம் நிலுவை நிலங்களுக்கு பட்டா வழங்க மனுக்கள் பெறும் முகாம் இன்றும் நாளையும் நடக்கிறது.
Update: 2024-01-19 02:55 GMT
விழுப்புரம் மாவட்டத்தில் நத்தம் "நிலுவை" என உள்ள இடங்களில் பட்டா வழங்க மனுக்கள் பெறுவது தொடர்பான முகாம் இன்று (வெள்ளிக்கிழமை) மற்றும் 23-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) ஆகிய 2 நாட்களில் விழுப்புரம் கோட்டாட்சியர் அலுவலகத்திலும், திண்டிவனம் சப்-கலெக்டர் அலுவலகத்திலும் நடைபெற உள்ளது. எனவே அந்தந்த கோட்டத்திற்கு உட்பட்ட பொதுமக்கள், கிராம கணக்கில் நத்தம் நிலுவை என குறிப்பிடப்பட்டுள்ள இனங்களுக்கு உரிய ஆவணங்கள் வைத்திருப்பவர்கள் மட்டும் இம்முகாமில் கலந்துகொண்டு மனு செய்து பயனடையுமாறு மாவட்ட கலெக்டர் பழனி தெரிவித்துள்ளார்.