தேவனூரில் பாரதம் குறித்து பா.ஜ சார்பில் பிரசார கூட்டம்
தேவனூரில் பாரதம் குறித்து பா.ஜ சார்பில் பிரசார கூட்டம் நடைபெற்றது.;
By : King 24X7 News (B)
Update: 2024-01-09 00:56 GMT
பாஜக கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள்
விழுப்புரம் மாவட்ட பா.ஜ., சார்பில் தேவனுாரில் நமது லட்சியம், வளர்ச்சி அடைந்த பாரதம் குறித்து பா.ஜ., பிரசார கூட்டம் நடந்தது. முகையூர் ஒன்றியத்திற்குட்பட்ட தேவனுார், கொல்லுார், வீரபாண்டி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் நடந்த கூட்டத்திற்கு, மாவட்ட தலைவர் கலிவரதன், பொதுச் செயலாளர் முரளி சதாசிவம் தலைமை தாங்கினர்.
சுற்றுச்சூழல் பிரிவு மாவட்ட தலைவர் ராதாகிருஷ்ணன், தரவு மேலாண்மைப் பிரிவு கார்த்திகேயன், துணைத் தலைவர் வசந்த் முன்னிலை வகித்தனர்.
பா.ஜ., எம்.பி., பிரிஜிலால், மத்திய அரசின் நலத்திட்டங்களை பயனாளிகளுக்கு வழங்கி, அரசின் திட்டங்கள் குறித்து எடுத்துக் கூறினார்.