பாண்டிய நகர் பகுதியில் சாலையில் தீப்பற்றி எரிந்த கார்
விருதுநகர் மாவட்டம் பாண்டிய நகர் பகுதியில் சாலையில் ஓடிய கார் திடீர் தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.;
விருதுநகரில் சாலையில் சென்று கொண்டிருந்த கார் திடீரென தீப்பிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது விருதுநகர் அருகே உள்ள பெரிய பேராளி கிராமத்தை சேர்ந்தவர் பாலமுருகன். இவர் சொந்தமாக தொழில் செய்து வருகிறார்.
இந்த நிலையில் இன்று தன்னுடைய காரில் சொந்த வேலை காரணமாக காரியாபட்டி பகுதிக்கு சென்று உள்ளார். இந்த நிலையில் காரியாபட்டியில் தன்னுடைய வேலையை முடித்து விட்டு பாலமுருகன் தன்னுடைய காரில் வீட்டிற்கு திரும்பி உள்ளார் .
அப்போது பாலமுருகனின் கார் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அருகே உள்ள கே.கே.எஸ்.எஸ்.என் நகர் பகுதியில் வந்து கொண்டிருந்த போது திடீரென காரில் உள்ள ஏசியில் இருந்து புகை வருவதை கண்ட பாலமுருகன் உடனடியாக காரில் இருந்து கீழே இறங்கி உள்ளார். இந்த நிலையில் திடீரென கார் தீ பிடித்து எரிவதை கண்டு அதிர்ச்சி அடைந்த பாலமுருகன் உடனடியாக விருதுநகர் தீயணைப்பு துறை மற்றும் காவல் துறைக்கும் தகவல் தெரிவித்தார்.
மேலும் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் காரில் பிடித்த தீயை நீண்ட நேரம் போராடி அணைத்தனர். மேலும் இந்த தீ விபத்தில் கார் முற்றிலும் கார் முற்றிலும் தீக்கரையானது . மேலும் இந்த தீ விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.