சின்னம்மாநாயக்கன்பட்டி அருகே பைக் மீது கார் மோதி விபத்து

Update: 2023-11-17 14:42 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

கரூர் மாவட்டம் வெள்ளியணை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மணவாடி, அருகே உள்ள பெருமாள்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் சங்கர கவுண்டர். இவர் நவம்பர் 16ஆம் தேதி மதியம் 12:00 மணி அளவில் திண்டுக்கல்- கரூர் சாலையில் அவரது டூவீலரில் சென்று கொண்டிருந்தார்.

இவரது வாகனம் சின்னமநாயக்கன்பட்டி பஸ் ஸ்டாப் அருகே வந்த போது, அதே சாலையில் வந்த சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் அருகே உள்ள திருக்கோவிலூர் பகுதியைச் சேர்ந்த பெரிய கருப்பன்  என்பவர், வேகமாகவும், அஜாக்கிரதையாகவும் ஓட்டி வந்த கார், சங்கர கவுண்டர் ஓட்டிச் சென்ற டூவீலரின் பின்னால் மோதி விபத்து ஏற்பட்டது.

Advertisement

இந்த விபத்தில் சங்கர கவுண்டருக்கு தலை, வலது கால் உள்ளிட்ட பகுதிகளில் பலத்த காயங்கள் ஏற்பட்டதால், உடனடியாக அவரை மீட்டு, தனியார் ஆம்புலன்ஸ் மூலம், மதுரையில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக சங்கர கவுண்டரின் மகன் பாலுசாமி என்பவர், வெள்ளியணை காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில், சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், காரை வேகமாக ஓட்டி விபத்து ஏற்படுத்திய பெரிய கருப்பன் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர் வெள்ளியணை காவல்துறையினர்.

Tags:    

Similar News