க.பரமத்தி பிரிவு அருகே காரும் காரும் மோதி விபத்து
க.பரமத்தி பிரிவு அருகே காரும் காரும் மோதி விபத்து. காவல்துறை வழக்கு பதிவு.
Update: 2024-01-03 07:33 GMT
க.பரமத்தி பிரிவு அருகே காரும் காரும் மோதி விபத்து. காவல்துறை வழக்கு பதிவு. தூத்துக்குடி மாவட்டம், மாநாடு தான்டபுத்தூர் அருகே சிதம்பரம், மேல தெரு பகுதியைச் சேர்ந்தவர் சத்யராஜ் வயது 28. இவர் டிசம்பர் 31ஆம் தேதி இரவு 9 1/4 மணி அளவில் தாராபுரம் - கரூர் சாலையில் அவரது காரில் சென்று கொண்டிருந்தார். இவரது கார் க.பரமத்தி பிரிவு பகுதியில் உள்ள தங்கவேல் வீடு அருகே சென்று கொண்டிருந்தபோது, கரூர் மாவட்டம், சின்னதாராபுரம் செல்வநகர் பகுதியை சேர்ந்த அஜ்மீர் ஓட்டி வந்த மற்றொரு கார் சத்யராஜ் ஓட்டிச் சென்ற காரின் பின்னால் மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் சத்யராஜுக்கு வலது காலில் பலத்த காயங்கள் ஏற்பட்டதால், உடனடியாக அவரை மீட்டு தனியார் ஆம்புலன்ஸ் மூலம், கரூரில் உள்ள கே.ஜி. மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக சத்யராஜ் காவல்துறையினருக்கு அளித்த புகாரின் பேரில், சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், காரை வேகமாகவும் அஜாக்கிரதையாகவும் ஓட்டி விபத்து ஏற்படுத்திய, அஜ்மீர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர் சின்ன தாராபுரம் காவல்துறையினர்.