தாராபுரம் அருகே குதிரை வண்டிகள் மீது கார் மோதி ஒருவர் பலி
முத்தூர் கோவிலுக்கு சென்று விட்டு குதிரை வண்டியில் பயணம் செய்த ஒருவர் பலியானர்.;
விபத்தில் சிக்கிய வண்டி
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே உள்ள பொட்டிக்கம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் சிவசாமி வயது 32 இவர் குதிரை வண்டி வைத்து அப்பகுதியில் வசித்து வருகிறார். இதேபோன்று முள்ளங்கி வலசு பகுதியைச் சேர்ந்த பழனிச்சாமி வயது 71 இவரும் அதே பகுதியில் வசித்து வருகிறார்.
இந்நிலையில் இரண்டு குதிரை வண்டிகளில் தனித்தனியாக தாராபுரத்தில் இருந்து முத்தூர் கோவிலுக்கு சென்று விட்டு மீண்டும் வீடு திரும்பி கொண்டிருக்கும்போது தாராபுரம் அருகே உள்ள நேற்று இரவு 11 மணி அளவில் ரெட்டிபாளையம் பிரிவு என்ற இடத்தில் பின்னால் வந்த ஸ்கோடா என்ற புதிய பதிவு எண் வாங்காமல் ஒட்டி வந்த கோவிந்தாபுரம் பகுதியைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் வயது 27 என்பவர் குதிரை வண்டி மீது பின்னால் மோதியதில் முள்ளங்கி வலசு,
பகுதியைச் சேர்ந்த பழனிச்சாமி மற்றொரு குதிரை வண்டியில் சென்று கொண்டிருந்த சிவசாமி மீது மோதியதில் இருவரும் படுகாயம் அடைந்தார். அக்கம் பக்கத்தினர் மீட்டு இருவரையும் தாராபுரம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
பழனிச்சாமி மேல் சிகிச்சைக்காக கோவையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று காலை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் சிவசாமி படுகாயத்துடன் தாராபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.இந்த விபத்து குறித்து தாராபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.