உறங்கி கொண்டிருந்தவர் மீது ஏறிய கார்

ஆண்டிபட்டி கோட்டையருகே ஆம்னி வேனை ரிவர்ஸ் எடுக்கும் போது உறங்கிக்கொண்டிருந்த முதியவர் கால் மீது ஏறியதால் படுகாயம் அடைந்த அவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.;

Update: 2024-01-21 06:35 GMT
காவல் நிலையம் 

கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி தாலுக்கா, ஆண்டிப்பட்டி கோட்டை காலனி பகுதியைச் சேர்ந்தவர் காளியப்பன்  60. இவர் ஜனவரி 17ஆம் தேதி இரவு 7 மணி அளவில்,அருகில் உள்ள அனுமந்தபுரம் டீக்கடை அருகே உறங்கி கொண்டிருந்தார். அப்போது, திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம், விஸ்வநாதன் நகர் பகுதியைச் சேர்ந்த முருகன்  38 என்பவர் ஓட்டி வந்த ஆம்னி வேனை, அனுமந்தபுரம் டீக்கடை அருகே ரிவர்ஸ் எடுக்க முயன்றுள்ளார்.

Advertisement

அப்போது, எதிர்பாராத விதமாக வேகமாக வேனை இயக்கியதால், அருகே உறங்கிக் கொண்டிருந்த காளியப்பன் கால் மீது ஆம்னி வேன் சக்கரங்கள் ஏறியது. இதில் காளியப்பனுக்கு இடது காலில் பலத்த காயம் ஏற்பட்டதால், உடனடியாக அவரை மீட்டு, ஆம்புலன்ஸ் மூலம், கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இந்த சம்பவம் குறித்து காளியப்பன் அளித்த புகாரின்பேரில், சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், இதுதொடர்பாக, கவனக்குறைவாகவும், வேகமாகவும் வேனை ஓட்டி, விபத்து ஏற்படுத்திய முருகன் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.

Tags:    

Similar News