கும்பகோணத்தில் நண்பரிடம் வாங்கிய இரவல் பேருந்தை விற்ற நபர்மீது வழக்கு

கும்பகோணம் பஸ் அதிபரிடம் 4 நாளுக்கு பேருந்தை இரவல் வாங்கிய மயிலாடுதுறை பஸ் அதிபர் விற்பனை மோசடியில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Update: 2024-01-01 14:42 GMT

காவல் நிலையம் 

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் நெல்லுக்கடைத் தெருவை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன் (வயது 71). மயிலாடுதுறை முதலியார் தெருவை சேர்ந்தவர் எஸ்.கே.மூர்த்தி என்கிற கிருஷ்ணமூர்த்தி.

இவர்கள் இருவரும் பஸ் அதிபர்கள் மற்றும் நண்பர்கள். கடந்த 2021 ஆம் ஆண்டு டிசம்பர் 19-ஆம் தேதி கிருஷ்ணமூர்த்தி தனது பஸ் ஒன்று பழுது ஏற்பட்டுள்ளதாகவும், மாற்று பஸ் சேவைக்காக ஒரு பஸ் தேவைப்படுவதாகவும், அதற்காக ஒரு பஸ்சை . 4 நாளுக்கு மட்டும் தரும்படி பாலசுப்பிரமணியனிடம் கேட்டுள்ளார்.

அன்றைய தினமே பாலசுப்ரமணியன் தனது பஸ்சை அனுப்பி வைத்ததாகவும், அதன் பிறகு அந்த பஸ்சை திருப்பி தராமல் இழுத்தடிப்பு செய்து வந்ததாகவும் தெரிகிறது. மேலும் விசாரணை செய்ததில் பாலசுப்ரமணியத்திற்கு சொந்தமான பஸ்சை அவருக்கு தெரியாமலேயே கிருஷ்ணமூர்த்தி வேறொரு நபருக்கு விற்பனை செய்து விட்டதாகவும் கூறப்படுகிறது.

இதனால் அதிர்ச்சி அடைந்த பாலசுப்பிரமணியன் மயிலாடுதுறை போலீஸ் நிலையத்தில் அளித்தார். புகாரின்பேரில் மயிலாடுதுறை போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வம் மற்றும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

இந்த நிலையில் உரிமையாளருக்கு தெரியாமல் பஸ்சை விற்பனை செய்ததாக மோசடி வழக்கு பதிவு செய்த மயிலாடுதுறை போலீசார் பஸ் அதிபர் கிருஷ்ணமூர்த்தியை வலைவீசி தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News