காமலாபுரத்தில் பான் குட்கா கடத்திய 2பேர் மீது வழக்குப்பதிவு
Omalur;
Update: 2023-12-25 06:25 GMT
வழக்குப்பதிவு
சேலம் மாவட்டம், ஓமலூர் அருகே காமலாபுரத்தில் ஓமலூர் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்பொழுது காமலாபுரம் பிரிவு ரோடு அருகே உள்ள தனியார் ஏவிஎம் பெட்ரோல் பங்க் அருகே வந்த மாருதி காரை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் தமிழக அரசு தடை செய்யப்பட்ட பான் குட்கா போதை பொருட்கள் இருப்பதை கண்டு பிடித்தனர். பின்னர் கார் மற்றும் கடத்தலில் ஈடுபட்ட இரண்டு பேரில் ஒருவர் தப்பித்த நிலையில் ஓமலூர் போலீசார் ஒருவரை காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர். அதில் ராஜஸ்தான் மாநிலம் ஜாலூர் சைலா தாலுக்கா பகுதியை சேர்ந்த தூரத் சிங் மகன் ஜித்தோசிங் மற்றும் சங்கர் சிங் என்பவருடைய மகன் மாங்கு சிங் ஆகியோர் என்பது தெரியவந்தது. இதை தொடர்ந்து கடத்தலுக்கு பயன்படுத்திய கார் மற்றும் சுமார் 19ஆயிரம் மதிப்புள்ள பான் குட்கா போன்ற போதை பொருட்களை பறிமுதல் செய்து அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தினர்.