வீட்டிற்கு தீவைத்த எட்டு பேர் மீது வழக்கு பதிவு !
ஏரியூர் அருகே தொன்னகுட்ட அள்ளி ஊராட்சி பேகியம் புதுக்காடு பகுதியில் நிலத்தகராறு காரணமாக வீட்டிற்கு தீ வைத்த எட்டு நபர்கள் மீது ஏரியூர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.;
By : King 24x7 Angel
Update: 2024-05-02 05:15 GMT
வழக்குப்பதிவு
தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ஏரியூர் அருகே தொன்னகுட்ட அள்ளி ஊராட்சி பேகியம் புதுக்காடு பகுதியை சேர்ந்தவர் முனியம்மாள்,இவருக்கும் முனியம்மாள் என்பவருக்கும் நிலப்பிரச்சினை இருந்துள்ளது.மேலும் முனியம்மாள் தனியாக கூரை வீட்டில் இருந்த போது அதே ஊரை சேர்ந்த பெரியகோபால், முனியம்மாள் பச்சையப்பன், தெய்வானை, பழனிசாமி,மாரியப்பன், முருகன், மாது ஆகியோர் முனியம்மாளை வீட்டை விட்டு வெளியே இழுத்து தள்ளிவிட்டு அவரது கூரை வீட்டிற்கு தீ வைத்துள்ளனர். இதுதொடர்பாக முனியம்மாள் ஏரியூர் போலீசாரிடம் நேற்று புகார் அளித்தார். இதனை தொடர்ந்து ஏரியூர் போலீசார் இவர்கள் 8 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.