ஊத்தங்கரை அருகே வீட்டின் மேற்கூரை உடைந்து விழுந்ததில் குழந்தை காயம்
ஊத்தங்கரை அருகே இந்திரா நினைவு குடியிருப்பு திட்டத்தில் கட்டப்பட்ட வீட்டின் மேற்கூரை உடைந்து விழுந்து குழந்தையின் தலையில் காயம் ஏற்பட்டது.
By : King 24X7 News (B)
Update: 2024-02-18 12:05 GMT
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை ஒன்றியத்திற்குட்பட்ட சந்திரப்பட்டி கிராமப் பகுதியில் கடந்த 2006-07 ஆண்டில் இந்திரா நினைவு குடியிருப்பு திட்டம் மூலமாக இப்பகுதியில் 60 குடியிருப்புகள் கட்டிக் கொடுக்கப்பட்டது அரசு மூலமாக நீண்ட நாட்கள் ஆகிய இந்த குடியிருப்பு பகுதிகளில் உள்ள அறுபது வீடுகளின் மேற்கூறையும் உடைந்து காணப்படும் அவல நிலை நிலவி வருகிறது.
குறிப்பாக மழைக்காலங்களில் மழைநீர் வீட்டின் மேற்கூரில் வருவதாகவும் வீட்டின் வெளிப்பகுதியில் பேனர் போன்ற பிளாஸ்டிக் பைகளை வைத்து வாழ்ந்து வருகின்றனர்.
இதுபோன்று பாதிப்புக்குள்ளாகிய பகுதிகளை அரசு அலுவலர்கள் நேரில் சந்தித்து எங்களது குறைகளை நேரில் பார்த்து பழுது நீக்கி தரவேண்டும் எனவும் இப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்