அரசு கலை கல்லூரியில் விடுதியில் குழந்தை பெற்ற கல்லூரி மாணவி
இன்று புதன்கிழமை காலை 9 மணி அளவில் தர்மபுரி அரசு கலை கல்லூரியில் விடுதியில் குழற்தை பெற்ற கல்லூரி மாணவி.
Update: 2024-02-14 05:35 GMT
தர்மபுரி அரசு கல்லூரியில் மாணவியர் விடுதியில் தங்கியிருந்து பி.காம் படித்துவந்த முதலாமாண்டு மாணவி விடுதியில் பெண்குழந்தை பெற்றெடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக அதியமான் கோட்டை காவல் நிலையத்தில் விசாரணை நடைபற்றது வருகிறது. தர்மபுரி அரசு கலைக் கல்லூரியில் பயின்று வரும் சந்தியா வயது 19 என்பவர் அரசு கலைக்கல்லூரி தர்மபுரியில் முதலாம் ஆண்டு பி.காம் படித்து வருகிறார். இவர் ஒட்டப்பட்டி பகுதியில் அமைந்துள்ள பெண்கள் ஆதிதிராவிடர் விடுதியில் தங்கி படித்து வரும் நிலையில் காலை 9 மணி அளவில் கல்லூரி மாணவியர் விடுதியில் பெண் குழந்தை பிறந்துள்ளது. இதன் பிறகு விடுதி காப்பாளர்கள் திருமதி கலைச்செல்வி கணவர் முருகதாஸ் மற்றும் அங்கு உள்ளவர்கள் மூலம் தர்மபுரி அரசு மருத்துவமனையில் உடனடியாக அட்மிட் செய்துள்ளனர் .இது குறித்து அந்த பெண்ணிடம் விசாரித்த போது அவருக்கும் அவரது பக்கத்து ஊரைச் சேர்ந்த மனோஜ் 21 என்பருடன் திருமணம் ஆகாமல் கணவன் மனைவியாக வாழ்ந்ததாக காவல்துறையின் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்தது., இது சம்பந்தமாக மேற்படி மாணவன் ஓசூர் பகுதி டிவிஎஸ் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார் .அவருக்கு தொலைபேசி மூலம் தகவல் தெரிவிக்கவே அவரும் ஒப்புக்கொண்டு தற்போது அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு வந்துள்ளார். இது சம்பந்தமாக பெண்ணின் பெற்றோருக்கு தகவல் தெரிவித்து அவர்களும் வந்து விட்டனர் .இந்த சம்பவம் தொடர்பாக எந்த விதமான புகாரும் உறவினர்கள் அளிக்கவில்லை . மாணவியின் வயிறு பெரிதாக இருப்பது தொடர்பாக வார்டன் மாணவியிடம் கேட்டபோது தன்னுடைய உடல்வாக அப்படித்தான் என மறைத்ததும் ஏன் மறைத்தாய் என்பதை கேட்டதற்கு தான் கல்லூரியில் சேரும்போது இரண்டு மாதமாக கர்ப்பமாக இருந்ததாகவும், தான் கர்ப்பமாக இருப்பது என்றால் கல்லூரியிலும் விடுதியிலும் இடம் தர மாட்டார்கள் என்பதால் மறைத்து கல்லூரியில் சேர்த்ததாக மாணவி தெரிவித்துள்ளார்.