முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நினைவு நாளை முன்னிட்டு ஆலோசனை கூட்டம்

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நினைவு நாளை முன்னிட்டு அதிமுக சார்பில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

Update: 2023-12-03 11:06 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

அதிமுக பொதுச் செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி.பழனிச்சாமி ஆணைக்கினங்க தமிழகத்தில் வரும் டிசம்பர் 5 ஆம் தேதி மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 7.ம் ஆண்டு நினைவு நாள் தமிழகம் முழுவதும் அனுசரிக்கப்பட உள்ளது.

அதன்படி பெரம்பலூர் மாவட்ட அதிமுக சார்பில் டிசம்பர் 5ஆம் தேதி மறைந்த ஜெயலலிதாவின் நினைவு நாள் அனுசரிக்கப்பட உள்ள நிலையில், அதனை முன்னிட்டு பெரம்பலூர் மாவட்ட அதிமுக சார்பில், பெரம்பலூர் மாவட்ட அதிமுக செயலாளரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான இளம்பை. இரா. தமிழ்ச்செல்வன் தலைமையில் முன்னாள் அமைச்சரும் அதிமுக அமைப்புச் செயலாளர் வரகூர். அருணாச்சலம் முன்னிலையில் பெரம்பலூர் ரெங்கா நகர் பகுதியில் உள்ள அதிமுக மாவட்ட அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் டிசம்பர் 5ஆம் தேதி மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் நினைவு தினத்தில், கட்சி நிர்வாகிகள் மற்றும் திரளான உறுப்பினர்கள் கலந்து கொண்டு புதிய பேருந்து நிலையத்தில் உள்ள புரட்சித்தலைவி ஜெயலலிதா மற்றும் அங்குள்ள தலைவர்களின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்வது, மற்றும் ஏழை எளியோருக்கு உணவுகள் வழங்கி உதவி செய்து, நலத்திட்டங்கள் வழங்குவது குறித்து கூட்டத்தில் கலந்துரையாடல் செய்யப்பட்டது.

இந்நிகழ்வில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மருதராஜா, சந்திரகாசி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பூவை.செழியன் ,நகரக் கழக செயலாளர் ராஜபூபதி, ஒன்றிய கழக செயலாளர்கள் கர்ணன்,. சிவப்பிரகாசம், ரவிச்சந்திரன், செல்வமணி, மாவட்ட அவைத் தலைவர் குணசீலன் மாவட்ட இணை செயலாளர் ராணி, மாவட்ட துணைச் செயலாளர் லட்சுமி ,மாவட்ட எம்ஜிஆர் மன்ற செயலாளர் ராஜாராம் மாவட்ட வர்த்தக அணி செயலாளர் ஏ.கே. ராஜேந்திரன்,மாவட்ட அமைப்பு சாரா ஓட்டுனர் அணி செயலாளர் முத்துசாமி, மாவட்ட மீனவர்அணி செயலாளர் முருகேசன் , மாவட்ட மகளிர் அணி தலைவர் ராஜேஸ்வரி, தளவாய் கிருஷ்ணன் உள்ளிட்ட மாவட்ட ஒன்றிய அதிமுக நிர்வாகிகள் உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News