நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பாக ஆலோசனைக் கூட்டம் 

தஞ்சாவூரில் தேர்தல் தொடர்பாக மாவட்ட ஆட்சித் தலைவர் தலைமையில் அதிகாரிகள் கலந்து கொண்ட கூட்டம் நடைபெற்றது.

Update: 2024-03-15 14:16 GMT

தஞ்சாவூரில் தேர்தல் தொடர்பாக மாவட்ட ஆட்சித் தலைவர் தலைமையில் அதிகாரிகள் கலந்து கொண்ட கூட்டம் நடைபெற்றது.


தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், நாடாளுமன்ற பொதுத்தேர்தல் 2024- க்கான அனைத்து தொடர்பு அலுவலர்கள், தேர்தல் மேற்பார்வை அலுவலர்களுக்காக நியமிக்கப்பட்டுள்ள இணைப்பு அலுவலர்கள் மற்றும் அனைத்து உதவித் தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கான கலந்தாய்வு மற்றும் அறிவுரைகள் கூட்டம், மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரும், மாவட்ட ஆட்சித்தலைவருமான தீபக் ஜேக்கப் தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்தில் நாடாளுமன்ற பொதுத்தேர்தல் 2024 க்கான தேர்தல் பணியாற்ற உள்ள அனைத்து அலுவலர்கள் (நோடல் ஆபிசர்ஸ்) மேற்கொள்ள வேண்டிய பணிகளுக்கான முன்னேற்பாடுகள் குறித்து மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர், மாவட்ட ஆட்சித்தலைவர் தீபக் ஜேக்கப் ஆலோசனை வழங்கிப் பேசினார்.  கூட்டத்தில், வருவாய்  அலுவலர் தெ.தியாகராஜன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) தையல் நாயகி அவர்கள், ஊரக வளர்ச்சி முகமை திட்ட அலுவலர் பாலகணேஷ்  மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News