வடமாநில தொழிலாளியை கத்தி குத்திய சக தொழிலாளி
மதுபோதையில் ஏற்பட்டதகராற்றில் கத்திகுத்து நடைபெற்றது;
Update: 2023-12-11 06:26 GMT
கத்தி குத்து
திருச்சி தென்னூர் பகுதியில் உள்ள ஒரு ஹோட்டலில் ஒடிசா மாநிலத்தை சேர்ந்த பசந்தகர் (39), மேற்கு வங்காள மாநிலம் மிட்னாபூரை சேர்ந்த ஷப்சங்கர் தாஸ் (41) ஆகிய இருவரும் வேலை பார்த்து வருகின்றனர். இந்நிலையில் 2 பேரும் ஹோட்டலில் யாரும் இல்லாத நேரத்தில் இரவு மது அருந்திக் கொண்டு இருந்தனர். அப்போது மது தீர்ந்து விட்டதால் ஷப் சங்கர்தாஸ் மீண்டும் மது வாங்கி வருமாறு பசந்தகரிடம் கூறியுள்ளார். அதற்கு அவர் இன்றைக்கு மது குடித்தது போதும். நாளை பார்த்துக் கொள்ளலாம் என்று சொல்லியதாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து அவர்களுக்கு இடையே ஏற்பட்ட தகராறில் பசந்தகர், ஷப்சங்கர் தாசை கத்தியால் குத்தியுள்ளாா். இது குறித்த புகாரின் பேரில் தில்லைநகர் போலீசார் வழக்கு பதிவு செய்து பசந்தகரை கைது செய்தனர்.