அடிப்படை வசதிகள் இல்லாத சுடுகாடு
நேமம் ஊராட்சியில் அடிப்படை வசதிகள் இல்லாத சுடுகாடு.;
Update: 2024-02-20 15:51 GMT
அடிப்படை வசதிகள் இல்லாத சுடுகாடு
வெள்ளவேடு அடுத்துள்ளது பூந்தமல்லி ஒன்றியத்துக்குட்பட்ட நேமம் ஊராட்சி. இப்பகுதியில் இறந்தவர்களின் உடலை தகனம் செய்வதற்காக நொச்சிமேடு பகுதியில் உள்ள சுடுகாடை, இப்பகுதிவாசிகள் பயன்படுத்தி வருகின்றனர். இந்த சுடுகாடு போதிய பராமரிப்பு இல்லாததால் புதர் மண்டிக் கிடக்கிறது. சுடுகாடு பகுதியில் சாலை, தண்ணீர், மின்சாரம் போன்ற எவ்வித அடிப்படை வசதிகள் மற்றும் சுற்றுச்சுவர் இல்லை. இதனால் பகுதிவாசிகள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட ஒன்றிய அதிகாரிகள் சுடுகாடு பகுதியை சீரமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.