கோவளம் பெஸ்ட் என்ற தலைப்பில் கிரிக்கெட் போட்டி

கோவளம் பெஸ்ட்' என்ற தலைப்பில் கிரிக்கெட் போட்டி நடைபெற்றது.

Update: 2024-05-12 15:10 GMT

கிரிக்கெட் போட்டி

திருப்போரூர் அடுத்த கோவளம் கடற்கரையில், 'கோவளம் பெஸ்ட்' என்ற தலைப்பில் எஸ்.டி.எஸ்., பவுண்டேஷன் சார்பில், கிரிக்கெட் போட்டி நடத்தப்படுகிறது. இதில், திருப்போரூர் சட்டசபை தொகுதியில் அடங்கிய 188 அணிகள் பங்கேற்கின்றன.

மொத்தம், 5 ஒவர்களை கொண்டது. நேற்று துவங்கிய போட்டிகள் 15 நாட்கள் வரை நடக்கிறது. நேற்று நடந்த முதல் போட்டியில், மாமல்லபுரம் எல்.எல்.எப்., அணி மற்றும் ஆமூர் என்.எப்.எஸ்.சி., கிரிக்கெட் அணி மோதியதில், மாமல்லபுரம் எல்.எல்.எப்., அணி வெற்றி பெற்றது. இரண்டாவது போட்டியில் முட்டுக்காடு ஸ்டைர்க்கெர்ஸ் கிரிக்கெட் அணி மற்றும் புது கல்பாக்கம் கோல்டன் ஸ்டார் அணி மோதியது.

இதில், புது கல்பாக்கம் கோல்டன் ஸ்டார் அணி வெற்றி பெற்றது. மூன்றாவது போட்டியில் ஆனுார் பிரண்ட்ஸ் கிரிக்கெட் அணி மற்றும் தேவனேரி குப்பம் டி.வி.கே., டைட்டன்ஸ் அணி மோதியது. இதில், ஆனுார் பிரண்ட்ஸ் கிரிக்கெட் அணி வெற்றி பெற்றது. நான்காவது போட்டியில் சட்ராஸ் குப்பம் சீ வோர்ஸ் அணி மற்றும் கேளம்பாக்கம் கே.எப்.சி., பி அணி மோதியது.

இதில், கேளம்பாக்கம் கே.எப்.சி., பி அணி வெற்றி பெற்றது. இதையடுத்து, இறுதி போட்டியில் வெல்லும் அணிக்கு, முதல் பரிசாக 2 லட்சம் ரூபாய், இரண்டாம் பரிசு 1 லட்சம் ரூபாய், மூன்றாம் பரிசு 75,000 ரூபாய் வழங்கப்படும். மேலும், நான்காம் பரிசு 50,000 ரூபாய், ஐந்தாம் பரிசு 40,000 ரூபாய், ஆறாம் பரிசு 30,000 ரூபாய், ஏழாம் பரிசு 20,000 ரூபாய், எட்டாம் பரிசு 10,000 ரூபாய் மற்றும் கோப்பை வழங்கப்பட உள்ளது.

Tags:    

Similar News