காரைக்குடியில் கழிவு நீருடன் நடைபெறும் தினசரி சந்தை

காரைக்குடியில் கழிவு நீருடன் நடைபெறும் தினசரி சந்தை - வாடிக்கையாளர்கள் அவதி.

Update: 2024-05-23 07:32 GMT

தினசரி சந்தை

சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் ஐந்து விளக்கு அருகே அண்ணா தினசரி சந்தை உள்ளது. இங்கு 50-க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. தினமும் காய்கறிகளை விற்க வரும் விவசாயிகள், வாங்க வரும் சில்லறை வியாபாரிகள், பொதுமக்கள் என 3,000-க்கும் மேற்பட்டோர் வந்து செல்கின்றனர். ஆனால் இந்த தினசரி சந்தையில் போதிய அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கவில்லை. மேலும் சந்தை அருகேயுள்ள குடியிருப்புகள், கடைவீதிகளில் கழிவுநீர் கால்வாய்கள் அடைப்பட்டுள்ளதால், மழைக்காலங்களில், மழைநீருடன், கழிவுநீர் கலந்து தினசரி சந்தைக்குள் புகுந்து விடுகிறது. இதனால் வியாபாரிகள், பொதுமக்கள் சிரமம் அடைந்து வருகின்றனர். இந்நிலையில் நேற்றிரவு காரைக்குடியில் பெய்த மழையில் கழிநீர் கலந்த மழைநீர் தினசரி சந்தைக்குள் புகுந்தது. மேலும் இன்று வரை சந்தை பகுதியில் கழிவுநீர் வடியாமல் தேங்கி துர்நாற்றம் வீசி வருகிறது. இதனால் வியாபாரிகள் காய்கறி வாங்க வரும் பொதுமக்கள் சிரமமடைந்தனர். மேலும் மக்களும் தொற்று நோய் அச்சத்துடன் காய்கறிகளை வாங்கிச் சென்றனர்.
Tags:    

Similar News