பாஜக கல்வெட்டை அகற்றியது கண்டித்து ஆர்ப்பாட்டம்

பாஜக கல்வெட்டை அகற்றியது கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Update: 2023-11-01 14:07 GMT
பாஜக ஆர்ப்பாட்டம்
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
திருவண்ணாமலை தெற்கு மாவட்ட பாரதிய ஜனதா கட்சி சார்பில் 480 இடங்களில் கொடி ஏற்றுவதாக அறிவித்திருந்த நிலையில்  துரிஞ்சாபுறம் ஒன்றியம் ஊசாம்பாடியில் மாநில தலைவர் அண்ணாமலை அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க கொடி ஏற்றுவதற்கு தயார் நிலையில் இருந்த கல்வெட்டு மற்றும் கொடி கம்பத்தினை காவல்துறையினர் அகற்றியதை கண்டித்து பாரதிய ஜனதா கட்சி திருவண்ணாமலை தெற்கு மாவட்ட தலைவர் ஆர். பாலசுப்பிரமணியன் தலைமையில்.  சாலை மறியல் நடைபெற்றது. இதில் கட்சி நிர்வாகிகள் கைது செய்யப்பட்டு தனியார் திருமண மண்டபத்தில் வைக்கப்பட்டனர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த மாவட்ட தலைவர் பாலசுப்பிரமணியன் கூறுகையில் , துரிஞ்சாபுரம் ஒன்றியம் உசாம்பாடி அடுத்த பிச்சநந்தல் கிராமத்தில் மாநிலத் தலைவர் அண்ணாமலை அவர்களின் மீது உள்ள அன்பின் காரணமாக அப்பகுதியைச் சேர்ந்த இளைஞர்களும் பின்தங்கிய மக்களும் பாஜக கொடி கம்பம் ஏற்றுவதற்கு ஏற்பாடு செய்திருந்தனர். ஆனால் அதனை காவல்துறையினர் தடுத்து நிறுத்தி கொடிக்கம்பம் மற்றும் கல்வெட்டுகளை சேதப்படுத்தி அகற்றினர். மேலும் கட்சி நிர்வாகிகளை மிரட்டி உள்ளனர்.ஆளுங்கட்சிக்கு ஜால்ரா அடித்துக் கொண்டிருக்கின்ற காவல்துறை பாஜக கொடி கம்பத்தை அகற்றி இருக்கிறது. இதனால் நாங்கள் அனைவரும் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு கைது செய்யப்பட்டு தனியார் திருமண மண்டபத்தில் அடைத்து வைக்கப்பட்டிருக்கிறோம். இதனால் மாநிலத் தலைவர் அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க நாங்கள் 22 ஒன்றியங்களிலும் ஒரு ஒன்றியத்திற்கு 10 கொடிக்கம்பம் என குறைந்தபட்சம் 225 கோடி கம்பம் நட்டே தீர்வோம். எங்களைக் காவல்துறை தடுக்கும் பட்சத்தில் தடையை மீறி நாங்கள் கொடிக்கம்பங்களை நடுவோம் அவர்கள் கைது செய்தால் தொடர்ந்து கைதாகுவும் என்று செய்தியாளர்கள் சந்திப்பில் மாவட்ட தலைவர் தெரிவித்தார் உடன் மாவட்ட பொது செயலாளர்கள் வினோத்கண்ணா.போத்தராஜா. மாவட்ட பொருளாளர் சுப்பிரமணியன் செயலாளர்.விஜய்.சுந்தரமூர்த்தி.கிருஷ்ணமூர்தி.மாநில செயலாளர் உள்ளாட்சி மேம்பாட்டு பிரிவு அறவாழி மற்றும் கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர்
Tags:    

Similar News