குமரி அம்மன்  கோவிலில் துப்பாக்கியுடன் நுழைந்த பக்தரால் பரபரப்பு. 

பகவதி அம்மன் கோவிலில் வடமாநில பக்தர் துப்பாக்கியுடன் சாமி கும்பிட வந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Update: 2023-12-24 01:57 GMT
பைல் படம்
கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில்  இன்று வடமாநிலத்தை சேர்ந்த பக்தர் ஒருவர் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வந்தார். அவர்  கோவில் விதிமுறைப்படி சட்டையை கழற்றி விட்டு கோவிலுக்குள் சென்றார். அப்போது  வெடிகுண்டு சோதனை நடத்தும் போலீசார் சோதனை செய்த போது அவரது இடுப்பில் கைத்துப்பாக்கி ஒன்று வைத்து இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.    உடனடியாக இது பற்றி கன்னியாகுமரி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. துணை போலீஸ் சூப்பிரண்டு மகேஷ்குமார் தலைமையில் போலீசார்  கோவிலுக்கு விரைந்து வந்து,   துப்பாக்கியுடன் கோவிலுக்கு வந்த நபரிடம் விசாரித்தபோது, அவர் மத்திய பிரதேச மாநிலத்தை சேர்ந்த காங்கிரஸ் எம்.எல்.ஏ. தேவேந்திர பட்டேல் என்பவருடைய தம்பி நிரஞ்சன் பட்டேல் (44) என்பதும், அவர் வைத்து இருந்த கைத்துப்பாக்கி உரிமம் பெற்ற துப்பாக்கி என்பதும், இந்தியா முழுவதும் அவர் அந்த துப்பாக்கியை எடுத்துச் செல்வ தற்கான உரிமத்தை பெற்றுள்ளார் என்பதும் தெரியவந்தது.    இதைத்தொடர்ந்து அவரிடம் போலீசார் கோவிலுக்குள் துப்பாக்கி கொண்டு செல்ல அனுமதி இல்லை என்று கூறினர். பின்னர்  போலீசாரின்  அறிவுரையின் படி, கைத்துப்பாக்கியை  பொருட்கள் பாதுகாக்கும் அறையில் வைத்துவிட்டு கோவிலுக்குள் சென்று சாமி தரிசனம் செய்தார்.   பகவதி அம்மன் கோவிலுக்கு துப்பாக்கியுடன் சாமி கும்பிட வந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. 
Tags:    

Similar News