திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் விவசாயி செல்போன் டவரில் ஏறி தற்கொலை மிரட்டல்!

தாராபுரம் உப்பாறு அணைக்கு திருமூர்த்தி அணையில் இருந்து தண்ணீர் வழங்க வலியுறுத்தி விவசாயி செல்போன் டவரில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2024-02-12 05:18 GMT

 விவசாயி செல்போன் டவரில் ஏறி தற்கொலை மிரட்டல்!

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் செல்போன் டவரில் ஏறி உப்பாறு விவசாயி சிவகுமார் தற்கொலை மிரட்டல்! தாராபுரம் உப்பாறு அணைக்கு திருமூர்த்தி அணையில் இருந்து தண்ணீர் வழங்க வலியுறுத்தி விவசாயி  செல்போன் டவரில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தாராபுரம் அருகே உள்ள உப்பாறு அணைக்கு திருமூர்த்தி அணையில் இருந்து பிஏபி பாசனத் திட்டத்தில் உபரி நீரைத் திறந்துவிடக்கோரி விவசாயிகள் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில்  19-நாட்களாக தொடர் காத்திருப்பு போராட்டத்தில் 300-க்கும் மேற்பட்ட விவசாயிகள் ஈடுபட்டு வந்தனர். ஆனால் பொதுப்பணித்துறை அதிகாரிகள்உப்பாறு அணைக்கு தண்ணீர் திறந்து விட இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை என தெரிகிறது.இதனால் ஆத்திரமடைந்த நிர்வாக குழு உறுப்பினர் சிவகுமார் மற்றும் சில விவசாயிகள் உப்பாறு அணை பகுதியில் உள்ள  செல்போன் டவரின் மேல் ஏறி உப்பாறு அணைக்கு தண்ணீர் கொடு இல்லையென்றால் தற்கொலை செய்து கொள்ளப் போவதாகக் கூறி மிரட்டல் விடுத்து போராட்டம் நடத்தி வருகின்றனர். தகவலறிந்த தாசில்தார்  தலைமையிலான வருவாய்த்துறையினர், பொதுப்பணித்துறை அதிகாரிகள் தாராபுரம் போலீசார் மற்றும்  தீயணைப்புத் துறையினர் உள்ளிட்டோர் அவரை கீழிறங்கச் செய்ய முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர் இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
Tags:    

Similar News