ரயிலில் ஏற முயன்ற போது தவறி விழுந்த பெண் பயணி உயிரிழப்பு
களியக்காவிளை அருகே ரயிலில் ஏற முயன்ற போது தவறி விழுந்த பெண் பயணி உயிரிழந்தார்.;
By : King 24X7 News (B)
Update: 2024-04-29 16:39 GMT
கோப்பு படம்
களியக்காவிளை அருகே பாறசாலை பரசுவைக் கல் பகுதியை சேர்ந்த வர் ராஜேந்திரன் நாயர். இவரது மனைவி குமாரி ஷீபா. குமாரிஷீபா தனுவச்சபுரம் ரயில் நிலையத்தில் கொச்சுவேளி-நாகர் கோவில் எக்ஸ்பிரஸ் ரயிலில் செல்ல வந்தார். அவர் வரும்போது ரயில் பயணி களை ஏற்றி இறக்கிவிட்டு புறப்பட தொடங்கியது.
அந்த ரயிலில் ஏற குமாரிஷீபா முயன்றார். இதில் கால்தவறி தண்டவாளத் திற்கிடையே விழுந்து சம்பவ இடத்திலேயே அவர் பலியானார். இதில் அவரது கால் ஒன்று துண்டாகி தண்டவாளத்தின் நடுப்பகு தியில் தனியே காணப்பட்டது. இந்த விபத்து தொடர்பாக பாறசாலை ரயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.