மேட்டூரில் குப்பை கிடங்கில் தீ விபத்து

சேலம் மாவட்டம் மேட்டூர் குப்பை கிடங்கில் தீ விபத்து, பொதுமக்கள் அவதி.

Update: 2024-03-22 05:14 GMT

தீ விபத்து

மேட்டூர் நகராட்சியில் 30 வார்டுகள் உள்ளது. இங்குள்ள வார்டுகளில் சேகரிக்கப்படும் குப்பைகள் நகராட்சிக்கு சொந்தமான சர்க்கார் தோட்டம் என்னும் இடத்தில் கொட்டப்பட்டு மக்கும் குப்பை, மக்காத குப்பை என தரம் பிரிக்கப்படுகிறது. இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களாக குப்பை கிடங்கு தீ பற்றி எரிந்து வருகிறது. காற்று பலமாக வீசி வருவதால் அந்த பகுதி முழுவதும் புகைமண்டலமாக காணப்பட்டது.குப்பையிலிருந்து வெளியேறிய புகை ஒருவித வாடையுடன் கடும் துர்நாற்றம் வீசி வருகிறது. இதனால் குழந்தைகள் , பெரியவர்கள் மட்டுமின்றி அனைத்து தரப்பினரும் பல்வேறு பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர். எனவே குப்பை கிடங்கில் எரியும் தீயை அணைக்க நகராட்சி அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்தனர்.
Tags:    

Similar News