சிந்தாமணியில் மளிகை கடையில் தீ விபத்து

சிந்தாமணியில் மளிகை கடையில் நடந்த தீ விபத்தில் பல லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசமாயின.

Update: 2024-06-01 03:44 GMT

சிந்தாமணியில் மளிகை கடையில் தீ விபத்து - பல லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசம் -திருப்பரங்குன்றம் எம் எல் ஏ ராஜன் செல்லப்பா நேரில் ஆய்வு. மதுரை மாநகராட்சி 89வது வார்டு மற்றும் திருப்பரங்குன்றம் தொகுதிக்குட்பட்ட சிந்தாமணியில் வசிக்கும் வழக்கறிஞர் செல்வம் என்பவருக்கு சொந்தமான மளிகை கடை ஒன்று உள்ளது. இவர் 89 வது வார்டு கவுன்சிலர் கவிதாவின் கணவர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் செல்வம் அதிமுக நிர்வாகிவாகவும் இருந்து வருகிறார். இந்நிலையில் இன்று காலை வழக்கம் போல் மளிகை கடையை திறக்கும் பொழுது உள்ளிருந்து புகை வருவதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். தொடர்ந்து கடையை திறந்து உள்ளே பார்த்த பொழுது கடை முழுவதும் முற்றிலும் எரிந்து போனது.

உடனடியாக இது குறித்து தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து தடியில் இருந்த இஞ்சி இருந்த பொருட்களை வெளியே அப்புறப்படுத்தி தண்ணீரை ஊற்றினர். இது குறித்து தகவல் அறிந்த திருப்பரங்குன்றம் எம் எல் ஏ ராஜன் செல்லப்பா உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கடையை ஆய்வு செய்து பார்வையிட்டு ஆறுதல் கூறினார். சேதம் அடைந்த பொருட்களின் மதிப்பு 20 லட்சம் இருக்கும் என்று நடை நிர்வாகத்தினர் தெரிவித்தனர். மேலும் இந்த தீ விபத்து குறித்து கீரை துறை காவல் நிலையத்திற்கு புகார் அளிக்கப்பட்டு காவல்துறை சார்பில் விசாரணை நடைபெற்று வருகிறது

Tags:    

Similar News