சரக்கு ஆட்டோவில் ஏற்பட்ட தீ விபத்தால் பரபரப்பு
நாமக்கல் மாவட்டம், வெப்படை அருகே பட்டாசு தீப்பொறி பட்டதால் சரக்கு ஆட்டோ தீ பிடித்து எரிந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சங்ககிரியில் இருந்து ஈரோடு நோக்கி வெப்படை வழியாக சரக்கு ஆட்டோ ஒன்று வந்து கொண்டிருந்தது. அப்பொழுது சின்னார் பாளையம் என்ற பகுதிக்கு வந்த போது, சரக்கு ஆட்டோ மேலே புகை வருவதை கண்ட வாகன ஓட்டி உடனடியாக அருகில் இருந்த வாட்டர் வாஷ் செய்யும் கடையில் வண்டியை நிறுத்தினார். அதற்குள்ளாகவே தீ மளவென பரவியது. உடனடியாக வாட்டர் வாஷ் கடையில் இருந்த ஊழியர்கள் தண்ணீரை பீச்சி அடித்து சரக்கு ஆட்டோவின் மேல் இருந்த தீ மேலும் பரவாமல் முழுமையாக அணைத்தனர்.
வெப்படை பகுதியில் ஒரு சிலர் பட்டாசு வெடித்துள்ளனர். அந்த பட்டாசு தீப்பொறிகள் அவ்வழியே சென்ற சரக்கு ஆட்டோ மேல் பட்டு தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது . தீ முழுமையாக அணைந்த பிறகு சிறிது நேரத்திற்கு பிறகு சரக்கு ஆட்டோ மீண்டும் ஈரோடு புறப்பட்டு சென்றது. தீ விபத்திற்கான முழுமையான காரணங்கள் தெரியாத நிலையில், காவல் நிலையத்திற்கு இது குறித்த எந்த புகாரும் வரவில்லை என வெப்படை போலீசார் தெரிவித்தனர்.