ஆலங்குடி அருகே ஏஜென்சி நிறுவன குடோனில் ஏற்பட்ட தீ விபத்து

பிஸ்கட் மற்றும் குளிர்பானங்கள் ஏஜென்சி நிறுவன குடோனில் ஏற்பட்ட தீ விபத்து ஏற்பட்டது.

Update: 2024-07-02 11:50 GMT

தீ விபத்தில் கருகிய பொருட்கள்

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள கல்லாலங்குடியில் அமைந்துள்ள பிஸ்கட் மற்றும் குளிர்பானங்கள் ஏஜென்சி நிறுவன குடோனில் ஏற்பட்ட தீ விபத்தில் சுமார் 12 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசம்,மூன்று மணி நேரத்திற்கு மேலாக போராடி தீயணைப்புத் துறையினர் தீயை அணைத்து கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே கல்லாலங்குடியில் தங்கச்சாமி என்பவருக்கு சொந்தமான பழைய கடலை மில்லில் தற்போது என்.டெக்ஸ் என்ற நிறுவனத்தினர் பிஸ்கட் மற்றும் குளிர்பானங்கள் சேமித்து வைக்கும் குடோனாக பயன்படுத்தி வந்துள்ளனர். 

 இந்நிலையில் இந்த குடோனில் இன்று அதிகாலை திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதனால் அந்த பகுதியே புகை மண்டலமாக காட்சியளித்ததால் இது குறித்து அப்பகுதி மக்கள் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அதன் அடிப்படையில் ஆலங்குடி தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து தீயை அணைக்க முற்பட்ட போது,

தீயின் வேகம் அதிகரித்து குடோன் முழுவதும் தீ பரவியதால் புதுக்கோட்டை தீயணைப்புத் துறையினரும் வரவழைக்கப்பட்டு சுமார் மூன்று மணி நேரத்திற்கு மேலாக போராடி அவர்கள் தீயை அணைத்தனர். அதற்குள்ளாக குடோனில் இருந்த சுமார் 12 லட்சம் மதிப்பிலான பொருட்கள் அனைத்தும் எரிந்து நாசமானது.

அதேபோல் குடோன் கட்டிடமும் தீயில் எதிந்து நாசமானது.இந்த சம்பவம் குறித்து ஆலங்குடி போலீசார் விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில் மின்கசியின் காரணமாக இந்த தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

Tags:    

Similar News