பெரியகுளம் அருகே எரிந்து வரும் காட்டுத் தீ
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் மீண்டும் பற்றி எரிந்து வரும் காட்டுத் தீயால் மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
தேனி மாவட்டம் பெரியகுளம் அதனைச் சுற்றியுள்ள மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியான லட்சுமிபுரம் வனப்பகுதியில் கடந்த ஐந்து தினங்களுக்கு முன்பு வரை பல்வேறு இடங்களில் காட்டுத்தீ நாள்தோறும் பற்றி எரிந்து வந்தது. இந்த நிலையில் 12 மற்றும் 13ஆம் தேதிகளில் கோடை மழை பெய்ததால் பற்றி எரிந்து வந்த காட்டு தீ கட்டுக்குள் வந்தது.
இந்நிலையில் கடந்த மூன்று நாட்களாக மீண்டும் வெயில் சுட்டெரிக்க தொடங்கிய நிலையில் மீண்டும் பெரியகுளம் அருகே லட்சுமிபுரம் பகுதியில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலையின் சொர்க்கம் வனப்பகுதியில் பிற்பகல் முதல் காட்டு தீ பற்றி எரிந்து வருகிறது. மேலும் பற்றி எரிய தொடங்கிய காட்டு தீ காற்றின் வேகம் அதிகரித்ததால் அப்பகுதியில் 200க்கும் மேற்பட்ட ஏக்கர் நிலப்பரப்பில் தொடர்ந்து பற்றி எரிந்து வருகிறது.
எனவே பற்றி எரிந்து வரும் காட்டுத் தீயால் வனங்களில் உள்ள அரியவகை மரங்கள் மற்றும் அரிய வகை தாவரங்கள் எரிந்து வருகிறது.