சங்கரன்கோவிலில் இலவச கண் மருத்துவ முகாம் நடைபெற்றது
பொதுமக்கள் கண் பரிசோதனை செய்து கொண்டனர்;
Update: 2023-12-10 12:41 GMT
சங்கரன்கோவிலில் இலவச கண் மருத்துவ முகாம் நடைபெற்றது
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் செங்குந்தனர் நடுநிலைப் பள்ளியில் வைத்து நாலு வாசன்கோட்டை கிராம உதயம், சங்கரா கண் மருத்துவமனை சார்பில் இலவச கண் மருத்துவ முகாம் நடைபெற்றது. இந்த முகாமிற்கு சங்கர சுப்பையா தலைமை வகித்து துவக்கி வைத்தார். கிராம உதயம் இலவச மருத்துவ துறை பொறுப்பாளர் கணேசன் வரவேற்புரை ஆற்றினார். மகாத்மா காந்தி சேவா மன்ற தலைவர் மனோகரன் சமூக ஆர்வலர்கள் கணபதி பரமசிவன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள். முகாமில் சங்கரா மருத்துவமனை டாக்டர் ஆகாஷ் பொதுமக்களுக்கு கண் பரிசோதனை செய்தார்.