சேலம் சண்முகா மருத்துவமனை சார்பில் முழு உடல் பரிசோதனை முகாம்

சேலம் சாரதா கல்லூரி சாலையில் உள்ள சண்முகா மருத்துவமனை குழும நிறுவனத்தின் 43-வது ஆண்டு விழாவை முன்னிட்டு பொதுமக்களுக்கு முழு உடல் பரிசோதனை முகாம் நடைபெற்றது

Update: 2023-12-29 03:08 GMT

முழு உடல் பரிசோதனை

சேலம் சாரதா கல்லூரி சாலையில் உள்ள சண்முகா மருத்துவமனை குழும நிறுவனத்தின் 43-வது ஆண்டு விழாவை முன்னிட்டு, நிறுவனத்தின் மற்றொரு சேவையாக சண்முகா பார்மசியுடன் டயக்னோஸ்டிக் என்ற பெயரில் பார்மசி ஜங்ஷன் ரயில் நிலையம் எதிரிலும், தாரமங்கலத்திலும் தொடங்கப்பட்டு உள்ளது. இதன் திறப்பு விழா சலுகையாக பொதுமக்களுக்கு இலவசமாக முழு உடல் பரிசோதனை முகாம் நடைபெற்றது. இதில் சண்முகா மருத்துவமனை நிர்வாக முதன்மை இயக்குனர் டாக்டர் பி.பிரபு சங்கர் தலைமையில் 5 பேர் கொண்ட மருத்துவ குழுவினர்கள் முழு ரத்த அணுக்கள் பரிசோதனை, கல்லீரல், கிட்னி, சிறுநீர், கொழுப்பு பரிசோதனை செய்தனர்.

மேலும் உணவுக்கு முந்தைய மற்றும் பிந்தைய ரத்த சர்க்கரை பரிசோதனை என ரூ.1000 மதிப்பிலான முழு உடல் பரிசோதனை இலவசமாக செய்யப்பட்டது. ேமலும் டாக்டர்களின் ஆலோசனைகள் வழங்கப்பட்டன. இந்த முகாமில் சேலம் ஜங்ஷன் மற்றும் தாரமங்கலத்தில் 300-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு சிகிச்சை பெற்றனர். இதற்கான ஏற்பாடுகளை சண்முகா மருத்துவமனை இயக்குனர் டாக்டர் பிரியதர்ஷினி பிரபு சங்கர் மற்றும் பார்மசி குழுவினர்கள் செய்திருந்தனர்.

Tags:    

Similar News