நெல்லையில் அதிமுக மூத்த முன்னோடிக்கு பொற்கிழி வழங்கும் நிகழ்ச்சி

நெல்லையில் அதிமுக மூத்த முன்னோடிக்கு பொற்கிழி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

Update: 2024-07-04 12:16 GMT

பொற்கிழி வழங்கிய அதிமுக நிர்வாகி

அதிமுக கழக கொள்கை பரப்பு துணை செயலாளர் பாப்புலர் முத்தையா நெல்லையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியின் 70வது பிறந்த நாளை முன்னிட்டு 70 நிகழ்ச்சி கொண்டாடி வருகின்றார்.

இந்த நிலையில் 53வது நாள் நிகழ்ச்சியாக அதிமுகவின் மூத்த முன்னோடி இஸ்மாயிலுக்கு 5000 ரூபாய் பொற்கிழி வழங்கும் நிகழ்ச்சி இன்று (ஜூலை 4) நடைபெற்றது. இதில் அதிமுக நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News