பல்லடத்தில் இந்தியா கூட்டணி செயல்வீரர்கள் கூட்டம்

கோவை நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட பல்லடம் சட்டமன்ற தொகுதியில் இந்தியா கூட்டணி செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது.

Update: 2024-03-26 05:41 GMT

செயல்வீரர்கள் கூட்டம் 

அதிமுகவும் பாஜகவும் வெவ்வேறல்ல, ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து சுலபமான வேட்பாளர்களை தமிழக முழுவதும் அறிவித்திருப்பதாக தொழில் துறை அமைச்சர் டி ஆர் பி ராஜா பல்லடத்தில் நடைபெற்ற செயல்வீரர்கள் கூட்டத்தில் பேச்சு. கோவை நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்டதும் ,  பல்லடம் சட்டமன்றத் தொகுதி இந்தியா கூட்டணி செயல்வீரர்கள் கூட்டம் பல்லடம் திருப்பூர் சாலையில் நடைபெற்றது. இந்த செயல் வீரர்கள் கூட்டத்தில் திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமார் மற்றும் அமைச்சர்கள் சாமிநாதன் ,முத்துச்சாமி கோவை நாடாளுமன்ற தொகுதி பொறுப்பு அமைச்சர் டிஆர்பி ராஜா உள்ளிட்டோர் கலந்து கொண்டிருந்தனர். செயல்வீரர்கள் கூட்டத்தில் பேசிய அமைச்சர் டி ஆர் பி ராஜா நடைபெற இருக்கின்ற தேர்தலானது தமிழகத்தில் ஏற்பட்ட விடியல் போல இந்தியா முழுவதும் ஏற்படுவதற்கான தேர்தல் எனவும் , மூன்று ஆண்டு கால சாதனைகளை சொல்லி திமுக வாக்கு சேகரிக்கும் நேரத்தில் மத்தியில் பத்தாண்டு கால ஆட்சியிலும் மாநிலத்தில் ஆட்சியில் இருக்கும் போது மத்தியில் கூட்டணியில் இருந்து எந்த திட்டத்தையும் செய்ய முடியாத கட்சிகள் தற்போது எந்த திட்டத்தை கொண்டு வரப் போகிறார்கள் என தாய்மார்கள் கேள்வி எழுப்ப வேண்டும் எனவும் , அதிமுகவும் பாஜகவும் வெவ்வேறல்ல இருவரும் ஒரே குட்டையில் ஊரிய மட்டைகள் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து தமிழகம் முழுவதும் வேட்பாளர்களை அறிவித்திருப்பதாகவும் , ஒருவருக்காக ஒருவர் சுலபமான வேட்பாளர்களை அறிவுத்திருப்பதாகவும் பேசினார். தொடர்ந்து நடைபெற இருக்கின்ற தேர்தல் சாதாரண தேர்தல் அல்ல தமிழினத்தையும் தமிழர் உரிமைகளையும் அழிக்க வேண்டும் என்ற கொள்கை கொண்ட கூட்டத்தை எதிர்த்து நடைபெறுகின்ற போர் எனவும் பேசினார். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த வீட்டு வசதித்துறை அமைச்சர் முத்துசாமி திமுக அரசின் 3 ஆண்டு சாதனைகளை சொல்லி மக்களிடம் வாக்கு சேகரிப்பதாகவும் சொன்ன வாக்குறுதிகளில் 99 சதவீதம் நிறைவேற்றிய தமிழக முதல்வர் நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு பல்வேறு வாக்குறுதிகளை அளித்துள்ளார். அது மக்களை வெகுவாக கவர்ந்துள்ளதாகவும் , கோவையில் போட்டியிடுகின்ற அண்ணாமலை ஏதாவது பேச வேண்டும் என்பதற்காக பேசுகிறார் எனவும் ,  திமுகவினர் தேர்தல் விதிமுறைகளை மீறி எந்த செயலையும் செய்யக்கூடாது என முதல்வர் கண்டிப்போடு உத்தரவிட்டிருப்பதாகவும் அதன்படி தான் செயல்பட்டு கொண்டிருப்பதாகவும் தெரிவித்தார். கோவை தொகுதியில் தமிழகத்திலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவோம் எனகூறினார்.
Tags:    

Similar News