திண்டமங்கலத்தில் வாக்குச்சாவடி களப்பணியாளர்கள் கூட்டம்
திண்டமங்கலத்தில் பாமக மேற்கு ஒன்றியம் சார்பில் வாக்குச்சாவடி களப்பணியாளர்கள் கூட்டம் நடைபெற்றது.
சேலம் மாவட்டம்,ஓமலூர் சட்டமன்றத் தொகுதி, ஓமலூர் மேற்கு ஒன்றிய பாமக சார்பில் நிர்வாகிகள் ஆலோசனை மற்றும் வாக்குச்சாவடி களப்பணியாளர் கூட்டம் ஓமலூர் அருகே உள்ள திண்ணடமங்கலம் ஊராட்சி பனங்காட்டூர் சமுதாய கூடத்தில் நடைபெற்றது.
பாமக சேலம் மேற்கு மாவட்ட செயலாளர் ராஜசேகர் மற்றும் மாவட்ட தலைவர் மாணிக்கம் ஆகியோர் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளர்கள்களாக மாநில வன்னியர் சங்க செயலாளரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான கார்த்திக் மற்றும் சேலம் பாராளுமன்ற தொகுதி பொறுப்பாளர் பிஎன் குணசேகரன் ஆகியோர் கலந்து கொண்டு நிர்வாகிகளுக்கு ஆலோசனைகளை வழங்கினர்.
இதில் ஓமலூர் மேற்கு ஒன்றிய செயலாளர் அன்பு கண்ணன், முன்னால் மாவட்ட வன்னியர் சங்க தலைவர் முருகன், சதாசிவம், முன்னாள் பாமக மேற்கு மாவட்ட செயலாளர் மேச்சேரி ராமகிருஷ்ணன், தேர்தல் பணி குழு தலைவர் சேட்டு, ஓமலூர் ஊராட்சி ஒன்றிய குழு துணை தலைவர் செல்வி ராமசாமி, கலா செல்வன் உள்ளிட்ட ஏராளமான கலந்து கொண்டனர்.